450. தீவிரவாதம் கருக்கிய மலர்கள்
"அம்மா, எனக்கு தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி தாயேன்" என்றும், "அம்மா, ஏன் எனக்கு சாப்பிட ஒண்ணுமே தர மாட்டேன்கிற, பசிக்குது" என்றும், "அம்மா, என்னை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போயேன்" என்றும் நெருப்பில் இட்ட புழுவாக, யாஷ் என்கிற அந்த 9 வயது பாலகனின் வேதனை அலறல்,பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது :( தனது கணவனை சமீபத்திய அகமதாபாத் குண்டு வெடிப்பில் பறி கொடுத்த (கீதா என்கிற) அந்தத் தாய், தன் மகனின் நிலையைக் கண்டு வெடித்து அழுவதைப் பார்க்கையில், 'கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா' என்ற ஆதார சந்தேகம் வருகிறது :(
மேற்கூறிய காட்சி, அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில்! அதே மருத்துவமனை வாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் காரணமாக 50% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் யாஷுக்கு, டாக்டரின் அனுமதியின்றி ஒரு சொட்டுத் தண்ணீரோ, உணவோ தர இயலாத நிலையில் கீதா பரிதவிப்பது காணச் சகிக்காததாக இருக்கிறது. டிரிப் வழியாக குளுகோஸுடன் பல மருந்துகள் யாஷுக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. யாஷின் அண்ணன் ரோஹன், அதே மருத்துவமனையில் 80% தீப்புண்களுடன் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறான்.
தீவிரவாதத் தாக்குதலின் கட்டுப்பாடற்ற, சிறிதளவும் மனிதநேயமற்ற குரூரத்தை, இந்த இரு குழந்தைகளின் அவல நிலையே காண்பவர், தெளிவாக உணர முடியும். அதே சிகிச்சைப் பிரிவில், உடல் முழுதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் சுனில் என்பவர், மிக்க மன உறுதியோடு, "என் வலியுடன் என்னால் போராட முடியும். ஆனால், எந்தத் தவறும் செய்யாத இக்குழந்தைகள் வேதனையில் துடிப்பதையும் அலறுவதையும் பார்க்கையில் என் இதயம் வெடித்து விடுவது போல இருக்கிறது!" என்று கூறுகிறார். மொத்த மருத்துவமனையும் அக்குழந்தைகளுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது.
அந்த சிவில் மருத்துவமனையின் வாசலில் அவரது இரு மகன்களுக்கு, தந்தையான வியாஸ் (அவர்களுக்காக வாங்கிய புது) சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தபோது தான், குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்தவர்களுடன் முதல் ஆம்புலன்ஸ் வண்டிகள் வரத் தொடங்கியிருந்தன. எமன் காத்துக் கொண்டிருந்தது தெரியாமல் அவர்களின் சைக்கிள் நேராக குண்டு வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி பயணித்தபோது, குண்டு வெடித்து, வியாஸ் சிதறடிக்கப்பட்டார். மற்றும் 11 பேர் (இதில் ஒரு டாக்டர் தம்பதியும் அடக்கம்!) பலியாயினர் :(
அடிபட்டவருக்கு உதவி செய்ய ஓடோ டி வந்த 20 வயது பவேஷ், மருத்துவமனை குண்டு வெடிப்பில் படு காயமடைந்து, அதே மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார். குண்டு வெடிப்பில் அடிபட்ட பல நபர்களை மருத்துவமனைக்கு கூட்டி வந்த வினோத் என்கிற ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனை குண்டு வெடிப்பில் சிக்கி, இரு கால்களும் செயலிழந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறார் ! அந்த வேதனையிலும், "இனி கஷ்டத்தில் இருக்கும் யாருக்கும் என்னால் உதவ முடியாதே" என்று அரற்றுகிறார் :( What a senseless and mindless act of violence unleashed by these terrorists!
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கியவர்கள் அங்கிருக்கும் 2 முக்கிய அரசு மருத்துவமனைகளுக்குத் தான் எடுத்து வரப்படுவார்கள் என்று சரியாக கணித்து, இந்த 2 மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் குண்டு வெடிக்குமாறு தீவிரவாதிகள் திட்டமிட்டுச் செய்துள்ளனர்.
ஈவு இரக்கமில்லாமல் அப்பாவிகளை வேட்டையாடும் இந்த தீவிரவாத அரக்கர்களை என்ன செய்தால் தகும் ?
எ.அ.பாலா
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
9 மறுமொழிகள்:
Test ...
படிக்கவே நெஞ்சம் பதறுகிறது. இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணித்து இதனை செயல்படுத்த எப்படித்தான் துணிவு வந்ததோ. சூரத்தில் ஒரு பெண்மணி தன் சொந்த ஊருக்கு செல்லும் முன் அளித்த பேட்டியில், 'நான் ஒரேயடியாக செத்து விட்டால் கூட பரவாயில்லை, பயங்கர காயங்களுடன் உயிர்பிழைத்து, அனைத்தையும் இழந்த பின் வாழ்க்கையோடு தெம்பில்லாத நிலையில் போராடவேண்டிவருமோ என்று பயமாயிருக்கிறது, அதனால்தான் ஊரை விட்டு செல்கிறேன்', என்றார். இப்பொழுது இவர்களின் நிலையை படித்தால் மனதே கனத்துவிடுகிறது.
மிகவும் வேதனையாகவும், கொடுமையாகவும் இருக்கிறது...:-(
மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று.நான் ஒன்று சொல்ல வேண்டுகிறேன் இந்நேரத்தில்,நானும் எனது நண்பனும் இருசக்கர வாகனத்தில் சென்றபொழுது விபத்துக்குள்ளாகியது.அப்பொழுது நான் மிகவும் கஷ்டப்பட்டென்.உடம்பின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது.மிகவும் சிரமமாக இருந்தது எல்லாவற்றுக்கும்.
ஆனால் இன்று பிஞ்சு குழந்தைகள் உடம்பினை பார்க்கும்பொது மிகவும் வேதனையாகவும்,நெஞ்சை உருக்குகின்றது. தீவிரவாதிகளை இவ்வுலகில் இருந்து அழித்து விடவேண்டும்.எந்த அமைப்பாக இருந்தாலும் சரி அவர்களை அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டுகிறேன்.
அதே போல் குஜராத் முதல்வர் அவருக்கு தான் முதலில் தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் எனென்றால் அவர் தான் முதல் குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும்.குண்டுகளை வைப்பதும் தீவிரவாதம் தான், அதே போல் மதக் கலவரத்தை தூண்டி விளையாடிய மோடியும் தூக்கில் போட வேண்டும்.தெஹல்கா ரிப்போர்ட் அனைத்துயையும் அம்பலப்படுத்தியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை குஜராத்தில்,, நாடு எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்பது கவலை அளிப்பதாக உள்ளது.
450 பேரா???
வேதனை...
படிக்கும்போதே மனது பட படக்கிறது...
உயிரை பற்றி எதாவது தெரியும அரக்கர்கர்களுக்கு?
வலின்ன என்ன/உயிர்ன்ன என்ன அப்படின்னு அதுகளுக்கு (அவன்கள் என்று சொல்லவே தகுதி இல்லதவர்கள்) புரியும?
இவர்கள் எங்களை விடவும் மிகவும் கீழானவர்கள்..
மிருகங்கள் பசியை தவிர வேறு எதற்கும் வேற்று உயிரை கொல்லது...
இப்படியும் சொல்லலாம், சும்மவாச்சும் கொல்வது மனிதனை தவிர வெரொன்றும் இல்லை.
தீவிரவதத்தின் உக்கிரத் தாண்டவத்தில்
தீப்புண்களால் வருந்தும் குழந்தைகள் செய்த தவறுதான் என்ன?பாவமில்லையா அந்த பிஞ்சு மலர்கள்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
குஜராத் அஹிம்சையின் பிறப்பிடமான காந்திமகான் பிறந்த மாநிலம் ஆனால் இன்று குஜராத் என்ற பெயரை சொன்னால் யாருக்காவது போர்பந்தர் எனும் ஊர் நினைவுக்கு வருகின்றதா என்றால் இல்லை .
எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கோத்ரா, மோடி மற்றும் சமீபத்தில் அஹமதாபாத் குண்டுவெடிப்பு.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது நியூட்டன் கோட்பாடு. ஆனால் நான் வன்முறையை ஒரு போதும் ஆதரிக்கவில்லை. அது மோடியானாலும் சரி, இந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணமான பேடியானாலும் சரி , எல்லோரின் தீவிரவாதமும் தண்டிக்கப்பட வேண்டும். கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த சின்னஞ்சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? உதவி செய்யப்போனவர்கள் கூட பாதிக்கப்பட்டால், எப்படி அய்யா மனிதாபிமானம் வாழும் ? எவன் வருவான் உதவி செய்ய ? இது மனிதர்களை மட்டும் கொல்ல நடக்கும் குண்டு வெடிப்பல்ல, மனிதாபிமானத்தையும் கொல்ல வைக்கப்பட்ட குண்டு.
Still you support 'Hilary Clinton' ?!
;)
ராப், ச்சின்னப்பயன், அஹமத், குரங்கு, கோவை விஜய், ஜோசப் பால்ராஜ்,
தங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
குரங்கு,
450 பேர் பலியாகவில்லை. 50 பேர் என்று ஞாபகம்.
450 என்பது எனது 450-வது பதிவைக் (எண்ணிக்கையை) குறிக்கிறது.
மாயவரத்தான்,
தனிமடல் கிடைத்ததா ?
எ.அ.பாலா
Post a Comment